இவ்வளவுதான் சேலரி கொடுத்தாங்க காக்கா முட்டை பாட்டிய ஞாபகம் இருக்கா?

கடந்த 2014 ஆம் ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட காக்கா முட்டை திரைப்படம் . இந்த திரைப்படத்தின் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் அவர்கள் தயாரிப்பில் மணிகண்டன் இயக்கத்தில் இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றிப் படமாக அமைந்தது. மேலும் இந்த திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதும் வழங்கப்பட்டது. அதில் நடித்த இரண்டு நடிகர்கள் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிக்கும் அற்புதம்.

காக்கா முட்டை பாட்டி

இந்த திரைப்படத்தில் பீட்சாவே தயாரிப்பதற்காக தோசையில் பிசா செய்த இந்த பாட்டியை கண்டிப்பாக யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த பாட்டிற்கு காக்கா முட்டை படத்திற்காக வெறும் 3000 ரூபாயும் ஒரு பட்டுப்புடவையும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது என ஒரு தனியார் யூடியூப் சேனலுக்கு இன்று அவர் பேட்டி அளித்துள்ளார். மேலும் நான் படத்தில் நடிக்க கம்பெனி மூலம் போனால் 5000 கொடுப்பதாகவும் ஏஜென்ட் மூலம் போனால் 2000 அல்லது 3000 ரூபாய் தான் கிடைக்கும் இதுதான் எப்பொழுதும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் காக்கா முட்டை படத்தில் டைரக்டரை நேரா கூப்பிட்டதாக படம் முடியும் வரையில் நடித்தால் உங்களுக்கு நல்ல அமௌன்ட் தரேன் என கூறியிருந்தார் எனவும். கடைசியாக அந்த படத்தில் இறப்பது போன்ற காட்சிக்கு மட்டும்தான் பட்டுப் புடவை வாங்கி கொடுத்ததாகவும். மேலும் அது டைரக்டருடைய கை காசு எனவும் அந்த பாட்டி கூறி இருக்கிறார்.

மேலும் விஜய் சேதுபதி அவர்கள் அந்த பாட்டிக்கு ஒரு பவுன் நகை கொடுத்ததாகவும். அது அவருக்கு மட்டுமல்லாமல் மிகவும் வயது  முதிர்ந்த பாட்டிகளுக்கும் . கொடுக்கப்பட்டதாக அந்த பாட்டி தெரிவித்து இருக்கிறார்.

admin  के बारे में
For Feedback - pjayakumar524@gmail.com
© 2025 THATSTAMIL | All rights reserved | Made With By WebpressHub.net